நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முற்பிறப்பில் நாம் செய்த பாவத்தை இப்பிறவியில் அனுபவிக்கிறோம். என்ன தான் நல்லவராகச் சிலர் வாழ்ந்தாலும், துன்பம் தொடர்கிறது.
இதனால் சிலர் விரக்தியின் உச்சத்தில் இருப்பதுண்டு. இந்த துன்பத்தை போக்கும் விரதம் பிரதோஷம்.
இது அமாவாசை, பவுர்ணமியை அடுத்த 13ம் நாளான திரயோதசி திதியன்று வரும்.
அன்று மாலை 4:30- 6:00 மணிக்குள் நந்தி அபிஷேகம் தரிசித்து சிவனை வழிபட்டால் மனநலம் சிறக்கும்.