நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள். உலக விஷயத்தோடு வாழ்க்கைத் தத்துவத்தையும் எடுத்து சொல்லுவதால், மாணவர்களின் இருளை நீக்கி ஒளியை கொடுப்பவர்கள் ஆவார்கள். இவர்களை ஆண்டுக்கு ஒருமுறையேனும் பார்த்து ஆசி பெறுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதஐயர் விஜயதசமி அன்று எங்கிருந்தாலும் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஆசி பெறுவார். பாடங்களை சொல்லித் தந்த ஆசிரியர்களிடம் நாமும் ஆசி வாங்கலாமே.

