
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பதினெட்டு புராணங்களை சரஸ்வதியின் அருளால் எழுதியவர் வேத வியாசர். இவற்றை 'மானா' என்ற குகையில் இருந்தபோது அவர் எழுதினார். ஓலைச் சுவடிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போல இந்த குகை காட்சி அளிப்பதால், அதனை 'வியாச புஸ்தக்' (வியாச புத்தகம்) என அழைக்கின்றனர்.

