ADDED : ஜூலை 31, 2021 01:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி வந்தாலே பெண்களுக்கு கொண்டாட்டம் தான். அம்மன் கோயில் எங்கும் திருவிழா களைகட்டும்.
பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடியை அம்மன் மாதமாக திகழும்படி வரமளித்தார். சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடியில் விசேஷமானதாக இருக்கும். இந்த மாதத்தில் சிவபெருமான் அம்மனுக்குள் ஐக்கியமாகி விடுவார். ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்கு உகந்தவை.