நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா பிரசித்தம். பசுமாடுகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பாவையில், 'குடம் வைக்கவைக்க பால் நிறையும் அளவிற்கு கறவைகள் (பசுக்கள்) அதிகமாக வாழும் பகுதி' என்று பொருள்படும்படியாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவள் இத்தலத்தை கோகுலமாகவே எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார். இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது. பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.

