ADDED : ஆக 26, 2011 09:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழுமுதற்கடவுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், புத்தாண்டு மாதத்தில் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தில் நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார். எல்லாவகையிலும் ஏற்றம் மிக்க மாதமாக ஆவணி அமைந்துள்ளது.