
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 'கள்ள வாரண பிள்ளையார்' அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் 'சோர கணபதி' என்பார்கள். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு அனைவருக்கும் கொடுத்தார். பொதுவாக, விநாயகர் பூஜைக்குப் பின்னரே இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும். இதனால் விநாயகப் பெருமான் அந்த அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் 'கள்ள வாரண பிள்ளையார்' எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி 'அமிர்தகடேஸ்வரர்' ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் இங்கு செய்வது சிறப்பாகும்.