sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கட்டிக் காப்பார் கால பைரவர்

/

கட்டிக் காப்பார் கால பைரவர்

கட்டிக் காப்பார் கால பைரவர்

கட்டிக் காப்பார் கால பைரவர்


ADDED : டிச 26, 2020 08:19 PM

Google News

ADDED : டிச 26, 2020 08:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவபெருமானின் பலவிதமான கோலங்களில் ஒன்று பைரவர். இவரது 64 வடிவங்களில் கால பைரவர் சிறப்பு மிக்கவர். பக்தர்கள் விரும்பும் வரத்தை சரியான காலத்தில் அருள்பவர் இவர். உயிரை பறிக்கும் காலன் போல நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர். இக்கட்டான சூழ்நிலையில் இவரை சரணடைந்தால் நிச்சயம் கரை சேர்ப்பார். தீராக் கடன், குடும்ப பிரச்னை, குழந்தையின்மை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து நம்மை விடுவிப்பவர் கால பைரவ மூர்த்தி. காசியின் காவல் தெய்வமான இவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன.

காசியில் உள்ள கோயில்களை எல்லாம் வழிபட்டபின் கடைசியாக காலபைரவரை வழிபட்டால் மட்டுமே காசி யாத்திரை முழுமை பெறும். யாத்திரை சென்ற பலனும் நமக்கு கிடைக்கும். பைரவரின் உடலில் நவக்கிரகங்களும் அடங்கியிருப்பதால் வழிபட்டவருக்கு கிரக தோஷம் மறையும். ஞாயிறு ராகு காலம், தேய்பிறை அஷ்டமி வழிபட உகந்தவை. தேய்பிறை அஷ்டமியன்று விளக்கேற்றி செவ்வரளி அர்ச்சனை, எலுமிச்சை மாலை, மிளகு கலந்த உளுந்த வடை, காரமான புளிச்சாதம் நைவேத்யம் செய்ய பிரச்னைகள் பறந்தோடும்.

வாழ்க்கை, தொழிலில் எதிரியால் தொல்லை ஏற்படும் போது, தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இதனால் எதிரிகள் இருக்குமிடம் தெரியாமல் விலகிச் செல்வர். தீயசக்திகள் இருப்பதாக உணர்ந்தால் பைரவருக்கு அபிஷேகம் செய்து தீர்த்தத்தை வீட்டில் தெளிக்க பிரச்னை தீரும். பைரவரின் வாகனமான நாய்க்கு உணவு அல்லது பிஸ்கட் அளித்து பசி போக்கினால் பைரவரின் அருள் கிடைக்கும். ஞாயிறன்று ராகு காலத்திலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் செய்வது பன்மடங்கு பலன் தரும்.

தேச. மங்கையர்க்கரசி






      Dinamalar
      Follow us