ADDED : ஜூலை 20, 2020 11:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதியன்று எள்ளும், நீரும் கலந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இதை இறந்தவர்களின் ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஒரே நாளில் தெய்வங்கள், பித்ருக்கள் ஆகிய இருவரையும் வழிபட வேண்டியிருந்தால் முதலில் முன்னோருக்குரிய சிராத்தம், தர்ப்பணத்தையும், பிறகு தெய்வங்களுக்குரிய பூஜை, ஹோமத்தையும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வாழும் காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டாலும், உறவினர், நண்பர்கள் கூட அவர்களைக் காப்பாற்ற இடமுண்டு. அவர்கள் இறந்த பிறகு சாஸ்திரம் கூறியபடி முறையாக சிராத்தம், தர்ப்பணம் செய்து உணவளித்து பசி, தாகத்தை போக்குவது பிள்ளைகளின் கடமை.