sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

புனித நீராட புறப்படுங்கள்!

/

புனித நீராட புறப்படுங்கள்!

புனித நீராட புறப்படுங்கள்!

புனித நீராட புறப்படுங்கள்!


ADDED : பிப் 03, 2017 10:06 AM

Google News

ADDED : பிப் 03, 2017 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கும்பகோணம் திருவையாறு சாலையில் 5 கி.மீ., தூரத்திலுள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் (கைலாசநாதர்) கோவிலில் ஹேரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட அமுதக்கிணறு தீர்த்தம் உள்ளது. இதில் மகா சிவராத்திரியன்று (பிப்.,24) நீராடினால் நல்ல புத்தி உண்டாகும். கல்வி வளம் சிறக்கும்.

* மதுரையில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள திருக்கோஷ்டியூர் (சிவகங்கை மாவட்டம்) சவுமியநாராயணப் பெருமாள் கோவிலில் மாசிமகத்தன்று (மார்ச்11) தெப்பத்திருவிழா நடக்கும். நினைத்தது நிறைவேற இந்நாளில் பக்தர்கள் தெப்பக்குளப் படிக்கட்டில் ஏற்றி வைக்கும் அகல் விளக்கை மற்றவர்கள்

வீட்டிற்கு எடுத்துச் செல்வர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இரண்டு தீபம் ஏற்றுவர்.

* கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமகத்தன்று நீராடுவது சிறப்பு. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, சரயு போன்ற புனித நதிகள் இங்கு வருவதாக ஐதீகம்.

* தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் உள்ள பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் பஞ்சவனேஸ்வரர் கோவிலில் சப்தசாகர தீர்த்தம் உள்ளது. மாசிமகத்தன்று இதில் நீராடுவோர் ஏழு கடலில் நீராடிய புண்ணியம் கிடைக்கப் பெறுவர்.

* கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சிவன் கோவிலை ஒட்டி ஓடும், மணிமுத்தாறு புண்ணிய தீர்த்தமாக உள்ளது. கோவிலின் வடக்கு கோபுர வாசலுக்கு நேரே உள்ள ஆற்றுப்பகுதி 'புண்ணியமடு' எனப்படுகிறது. இதில் மாசிமகத்தன்று நீராடினால் முன்னோர் ஆசி கிடைக்கும்.






      Dinamalar
      Follow us