ADDED : ஜூலை 29, 2016 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பகோணம் சென்னை சாலையில் 23 கி.மீ., தூரத்தில் உள்ள சிவத்தலம் திருப்பனந்தாள். பனங்காடாக விளங்கிய இங்கு சிவன் மேற்கு நோக்கி தாலவனேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கி நிலையில் அம்மன் தாலவனேஸ்வரி என்ற பெயரில் வீற்றிருக்கிறாள். தலவிருட்சமாக பனைமரம் உள்ளது. சுயம்பு மூர்த்தியான சிவனை பிரம்மா,விஷ்ணு, இந்திரன், அகத்தியர், நாக கன்னியர் வழிபட்டு நற்கதி பெற்றனர். தாலவனேஸ்வரி சன்னிதியில் உள்ள 'ஆடிப்பூர அம்மன்' என்ற பெயரில் ஒரு அம்பாள் காட்சியளிக்கிறாள். ஆடிப்பூர நாளில் இவளை வழிபட விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். தலவிருட்சமான பனைமரத்தின் அருகில் கிணறாக உள்ள நாககன்னிகை தீர்த்தத்தில் நீராடினால் நாகதோஷம் நீங்கி திருமணம் கைகூடும் என்பர்.