ADDED : ஜூன் 02, 2017 01:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகார் என்பர். அடியவர் சொல்ல ஆண்டவன் கைப்பட எழுதிய பெருமை இதற்குண்டு. இதன் ஆசிரியர் மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மக நட்சத்திரத்தன்று (ஜூன் 28) நடக்கிறது.
அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர், குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) கோவில் கட்டினார். இதனால் மன்னரின் தண்டனைக்கு ஆளானார். சிவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி, மாணிக்கவாசகரின் பெருமையை உலகறியச் செய்தார். அதன் பின் சிதம்பரம் சென்ற அவர், திருவாசகம் பாடினார். இதன் முதல் பகுதியாக உள்ள சிவபுராணம், சிவனின் பெருமைகளை விளக்குகிறது. 95 வரிகள் கொண்ட இதைப் படிக்க, முற்பிறவியில் செய்த பாவம் தீரும் என மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

