ADDED : மே 15, 2021 03:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டுக்கு ஒருமுறை வரும் அதிசய நாள் அட்சய திரிதியை. குறைவு இல்லாதது என்பது இதன் பொருள். இந்நாளில் தயிர்சாதம் தானம் செய்தால் மகாலட்சுமி மனம் குளிர்வாள். இந்நாளில் எதைச் செய்தாலும், அதன் பலன் ஆயிரம் மடங்காக நமக்கு வரும். சுயநலம் இன்றி பிறருக்கு உதவுவது அவசியம். உணவு, உடை, கல்விக்கு உதவி, முதியவருக்கு பணஉதவி என தர்மம் செய்தால் குடும்பத்தில் 21 தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும். இந்த வாய்ப்பை நழுவ விடலாமா.