ADDED : ஆக 26, 2011 09:40 AM
தோப்புக்கரணம் என்ற சொல் 'தோர்பிகரணம்' என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கும் மேற்பட்டதைக் குறிப்பதை பன்மை என்றும் இரு வகைகளில் குறிக்கிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பதை 'இருமை' என்பர். பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது.
கை என்பதை சமஸ்கிருதத்தில் 'தோஸ்' என்பர். 'தோஷா' என்றால் 'ஒரு கை'. 'தோர்ப்யாம்' என்றால் 'இரண்டு கைகள்'. மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், 'தோர்பி' என்ற சொல்லுக்கு 'இரண்டுக்கும் மேற்பட்ட கைகள்' என்று பொருள். அப்படியானால், இரண்டுக்கு மேற்பட்ட கைகளை உடைய ஒருவர் தான் முதன்முதலாக தோப்புக்கரணம் போட்டிருக்க வேண்டும். திருமாலுக்கு நான்கு கைகள். எனவே தான் இதற்கு 'தோர்பிகர்ணம்' என்ற பெயர் ஏற்பட்டது.