ADDED : மார் 10, 2017 12:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாசி மக விரதம் மிக எளிமையானது. இந்நாளில் பட்டினியாக இருக்க வேண்டியதில்லை. புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தானம் செய்தால் போதும். இந்த விரதத்துக்கே 'தான விரதம்' என்று பெயர். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், அந்தணர்களுக்கு இந்நாளில் தங்கம், நவரத்தினங்களை தானமாக வழங்கிய காலம் உண்டு. இன்றைய சூழலில் ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம், கல்வி நிதி, மருத்துவச்செலவு போன்ற தானங்களைச் செய்யலாம்.
சிவமந்திரமான நமசிவாய, சிவாயநம ஆகியவற்றை இந்நாளில் 1008 முறை சொன்னால் செல்வ வளமும், பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

