ADDED : செப் 04, 2022 01:40 PM

* திருஞான சம்பந்தர் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சிவன் கோயிலில் தங்கியிருந்தார். இங்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞன் ஒருவன் இறந்ததை அறிந்து, பதிகம் பாடி உயிர் பிழைக்கச் செய்தார். இக்கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரில் விஷபயம் போக்கும் 'விடம்(விஷம்) தீர்த்த விநாயகர்' கோயில் உள்ளது.
* திருநெல்வேலி வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் உச்சிஷ்ட கணபதி கோயில் உள்ளது. இவருக்கு முதுகை காட்டி தோப்புக்கரணம் இடுவது மரபாக உள்ளது. முகம், முதுகு என்ற பாகுபாடு கடவுளுக்கு கிடையாது, எல்லாம் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்கின்றனர்.
* விநாயகருக்கு 16 சிறப்பு பெயர்கள் உள்ளன. இதில் 16வது பெயர் ஸ்கந்த பூர்வஜன். தம்பியான முருகனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 'கந்தனுக்கு மூத்தவர்' எனப்படுகிறார். அம்மா, அப்பா, மாமா, அத்தை என பல உறவுகள் இருப்பினும் தம்பி மீதுள்ள அன்பால் இப்படி அழைக்கப்படுகிறார்.

