நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த மூவுலகங்களுக்கும் முழுமுதற் கடவுளாக திகழ்பவர் விநாயகர். ஞான நுால்கள் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள விநாயகர் என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.
இதன் அடிப்படையில் கோயிலில் மகா கணபதியாகவும், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் பாதாள விநாயகராகவும் அருள்புரிகின்றார்.

