
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமயமலையில் 14,000 அடி உயரத்திலுள்ள கோமுக் என்ற குகையில் இருந்து கங்கை நதி உற்பத்தியாகிறது. இந்த இடத்தை கங்கோத்ரி என்று அழைப்பர். அங்கு கங்கா தேவிக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் ஜூன் முதல் அக்டோபர் வரை திறந்திருக்கும். நவம்பர் மாதத்தில் பனிமூட்டம் காரணமாக கோவில் அடைக்கப்படும். மே மாதம் வரை கோவிலை தரிசிக்க முடியாது. இந்த கோவில் நடை சாத்தும் போது, உள்ளே ஒரு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் பனியிலும் அணையாமல், தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் என்பது பக்திப்பூர்வமான விஷயம்.