ADDED : ஜூன் 09, 2017 01:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி நிறுவனங்கள் திறந்துள்ள நிலையில், மாணவர்கள் காயத்ரியை வணங்கி, படிப்பைத் துவக்கலாம். வேதத்தின் பொருளான இவளை சில கோவில்களில் சிலை வடிவில் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரர் சன்னதி நுழைவுவாயில் அருகில் இவள் ஒரு தூணில் காட்சி தருகிறாள். வெண்தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் காயத்ரி காட்சி தரும் கோவில் சிதம்பரத்தில் உள்ளது.
ஐந்து முகங்களுடன், பத்து கரங்களில் சங்கு, சக்கரம், கதை, கோடரி, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு ஆகியவற்றை வைத்திருக்கிறாள். பக்தர்கள் இவளை காலையில் காயத்ரியாகவும், மதியம் சாவித்திரியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் கருதி, காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குகிறார்கள். மாணவர்கள் தாமரை மலர் அணிவித்து வழிபடுகிறார்கள்.

