ADDED : ஜூலை 29, 2016 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தட்சிணாயண புண்ணிய காலமான ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி துவங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழி உண்டு. நாடு செழிக்க நதிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர். காவிரிக்கரை மாவட்டங்களில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கும் புதிய முயற்சி இனிதே நிறைவேறும். பக்தர்கள் மனதில் நினைத்தது நிறைவேற காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதிதாக திருமணமானவர்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். இதனை 'தாலி பெருக்குதல்' என்று குறிப்பிடுவர். இந்நாளில் வீட்டுத் தோட்டத்தில் கொடிகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர்க்குழி இடுவர். தங்க ஆபரணம் வாங்கவும் சிறந்த நாளாகும்.