ADDED : ஜூலை 29, 2016 10:06 AM

ராமர் தன் தந்தையான தசரதருக்கும், பறவைகளின் அரசரான ஜடாயுவிற்கும் எள்ளும் நீரும் இறைத்து பிதுர்கடன் செய்த தலம் செதலபதி. தில தர்ப்பணபுரி என்னும் புராணப்பெயரே நாளடைவில் செதலபதி என்றாகி விட்டது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலுள்ள பூந்தோட்டம் கிராமம் அருகில் இவ்வூர் உள்ளது. திலம் என்றால் 'எள்'. அரிசிலாற்றங்கரையில் உள்ள இத்தலத்தில் சிவபெருமான் முத்தீஸ்வரர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். அம்பிகையின் திருநாமம் சுவர்ணவல்லி. மனித முகத்துடன் இருக்கும் நரமுக கணபதியை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கோவில் பிரகாரத்தில் ராமரும், லட்சுமணரும் தர்ப்பணம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். ஆடி அமாவாசையன்று இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்.