
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவள் அம்பிகை. உபநிடதத்தில் அம்பிகைக்கு 'ஹைமவதி' என்று பெயருண்டு. தற்காலத்தில் இதை 'ஹேமாவதி' என்கிறார்கள். இந்தச் சொல்லுக்கு இருவிதமான பொருள் உண்டு. 'ஹிமம்' என்றால் பனி. பனிமலையான இமயமலைக்கு 'ஹிமாசலம்' என்று பெயர். அந்த மலைக்கு அரசனான ஹிமவானின் மகள் என்பதால் அம்பிகைக்கு 'ஹைமவதி' என்று பெயர் ஏற்பட்டது. 'ஹேமம்' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது ஹைமம். 'ஹேமா' என்றால் 'தங்கம்'. அம்பாள் 'தங்கம் போல பொன்னிறத்தில் ஜொலிப்பவள்' என்பதால் 'ஹேமாவதி' எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.

