ADDED : அக் 07, 2012 05:32 PM

சாப்பாடு மண்சட்டியில் தான்! திருப்பதியில் சீனிவாசப்பெருமாளுக்கு தயாராகும் சமையலை, அவரது அம்மா வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம். மடைப்பள்ளியில் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரிபாத், சர்க்கராபாத், ஜீரா பாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்புவடை, பானகம், அப்பம், ஜிலேபி, ஹோலிப்பூ, தேன்குழல், கயாபடி, வட்டப்படி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை, லட்டு ஆகியவை தயாராகின்றன. இதில் 'மனோகரம்' என்னும் லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி வகைவகையான தென்னிந்திய, வடஇந்திய பதார்த்தங்கள் மடைப்பள்ளியில் தயாரிக்கப்பட்டாலும், பெருமாளுக்கு நிவேதனம் செய்வது என்னவோ தயிர்சாதம் மட்டும் தான். இதனை மண்பாண்டத்தில் வைத்து படைப்பர். பணக்கார சுவாமியாக தோற்றமளித்தாலும், எளிமையை நமக்கு கற்றுத்தருபவர் அவர்.

