
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீங்கள் கார், டூவீலர் வாங்க ஏற்ற மாதம் வைகாசி. இந்த மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி (ஜூன்௧) அன்று சிவனை நினைத்து ரிஷப விரதம் இருக்க வேண்டும்.
பூஜையின் போது, 'நமசிவாய, சிவாயநம' உள்ளிட்ட சிவமந்திரங்களையும், 'நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' எனத்துவங்கும் சிவபுராணம் சொல்ல வேண்டும். குபேரன் இந்த விரதம் இருந்து புஷ்பக விமானம் என்னும் வாகனத்தை சிவனிடம் பெற்றான். இதே போல நாமும் சிவனருளுடன் வாகனம் வாங்க இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். பின்னர் வரும் முகூர்த்த நாளில் (ஜூன் 4,5,8,14) வாகனம் வாங்கலாம்.

