ADDED : ஜூன் 27, 2022 02:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானை என்றாலே தந்தம் தான் அழகு. ஆனால் விநாயகர் தன் அழகான தந்தத்தை உலக நன்மைக்காக இழக்க முன்வந்தார்.
தர்மத்தை உபதேசிக்க விரும்பிய வியாசர், மகாபாரத கதையை எழுத விரும்பினார். அதற்கு உதவியாளர் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணினார். அதற்காக விநாயகர், தன் தந்தத்தை எழுத்தாணியாக்கி, வியாசர் சொல்லச் சொல்ல பாரதத்தை எழுதினார்.
அழகு, கவுரவம், செல்வம் என பெருமைக்குரிய விஷயங்கள் எத்தனையோ இருந்தாலும் அதை விட மேலானது தர்மமே என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார் ஒற்றைக் கொம்பனான விநாயகர்.

