ADDED : நவ 04, 2016 12:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தொடங்கி, ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று, முருகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படும் விரதம் இது. இப்படி 12 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் முருகனின் உலகமான கந்தலோகத்தை அடைவர். பிறப்பில்லா வாழ்வு பெறுவர். வாழும் காலத்தில் சகல செல்வமும் பெறுவர். இவர்களது குடும்பத்துக்கு முருகன் அருளால், தகுந்த பாதுகாப்பு கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்கள் பகலில் பால், பழம் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒரு பொழுது எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

