
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுபநிகழ்ச்சி நடத்தும் நல்ல மாதமாக தை உள்ளது. பெண்ணுக்கு மணம் பேசும் பெற்றோர், “வரும் தையில் கல்யாணத்தை வைச்சுக்கலாம்” என்பது வழக்கம். ஏனென்றால், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பர். தைமாதத்தில் பெரும்பாலும் அறுவடை முடிந்து விடும். அதனால் உழவர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம். கல்யாணச் செலவுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இப்பழமொழி உண்டானது. இதற்கு வேறொரு பொருளும் உண்டு. வயலில் அறுவடை முடிந்தால் வரப்பு நடப்பதற்கு வசதியாக இருக்கும். அதனையே 'தைபிறந்தால் வழி பிறக்கும்' என்பர்.

