ADDED : ஆக 12, 2011 03:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனேவிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள கேட்காவாலேவில், வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. காலை 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருமலை திருப்பதி போலவே, தென்னாட்டுச் சிற்பக்கலை பளிச்சிடும்படி கோயில் அமைந்திருக்கிறது. லட்டு பிரசாதமும் உண்டு. ஏராளமான மராட்டிய மக்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். இந்தக் கோயிலில் இருந்து திரும்பி வரும் வழியில் தத்தாத்ரேயர், நாராயணேஸ்வரர் கோயில்கள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள்.