ADDED : நவ 27, 2020 12:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தீபாவளி மட்டுமின்றி வெள்ளிக்கிழமை மற்றும் திரிதியை திதிகளில், குபேரலட்சுமியை பூஜிப்பது நல்லது. அப்போது மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வெள்ளை நிற வாசனை மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, சாம்பிராணி, நவதானியத்தை படைத்து 'ஓம் மகாலட்சுமியை நமஹ' என்னும் மந்திரத்தை
108 முறை ஜபிக்கலாம். பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை மகாலட்சுமிக்கு உகந்தவை. இவற்றை ' பஞ்ச லட்சுமி திரவியம்' என்பர். இவற்றை தானமாக அளித்தால் திருமகள் மனம் குளிர்வாள். பாலை குழந்தைகளுக்கும், தாமரையை கோயில் வழிபாட்டுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தை பறவைகளுக்கும், நாணயத்தை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும்.