ADDED : ஆக 26, 2014 04:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் மட்டுமே அனைவரும் அணுகும் விதத்தில் எளியவராக இருக்கிறார். மற்ற தெய்வங்களை தரிசிக்க வேண்டும் என்றால் காலநேரம் பார்த்து நீராடி விட்டு, பூஜைக்குரிய சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதுவும் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றாலும், சுவாமிக்குப் பக்கத்தில் செல்ல முடியாது. கொஞ்சம் தள்ளியே நிற்கும்படி இருக்கும். ஆனால், விநாயகர் தன்னை நாடி வரும் யாரையும் மறுப்பதில்லை. சாலை ஓரத்திலோ, மரத்தடியிலோ வீற்றிருந்து, பள்ளிக்கூடம், அலுவலகம், கடைத்தெரு என்று போகிற வழியிலேயே நிமிர்ந்து பார்த்தால் போதும் என மகிழ்ச்சியோடு காட்சி தருவார். நெற்றியில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறுதேங்காய் போடுவது என
அவருக்குரிய வழிபாட்டு முறைகள் எளிமையாக இருக்கின்றன.