
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியன்று வாசலில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டுங்கள். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலை அல்லது படத்தை வைக்க வேண்டும். விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல் இருக்க கூடாது. அவல், பொரி, கடலை, மோதகம், சுண்டல் படைத்து, 'சீதக்களப' எனத் தொடங்கும் விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை பாடல்களைப் பாடுங்கள். தீபம், சாம்பிராணி ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மூன்றாம் நாளன்று சிலையை நீரில் கரைக்கும் வரை தினமும் காலை, மாலையில் பூஜை செய்யுங்கள்.

