ADDED : அக் 27, 2017 09:22 AM

காசியில் இருக்கும் அன்னபூரணி, அன்னம் அளிக்கும் தாயாக திகழ்கிறாள். கையில் பால் சோறு நிறைந்த பாத்திரமும், கரண்டியும் ஏந்தி நிற்கும் இவளை
வழிபட்டால் வாழ்வில் உணவுக்கு குறைவிருக்காது.
திருமூலரின் திருமந்திரம் 'அன்பே சிவம்' என்று கூறுகிறது. 'அறிவான தெய்வமே' என்று தாயுமானவர் சிவபெருமானை குறிப்பிடுகிறார். 'இந்த அன்பும், அறிவும் பெற விரும்பினால் அன்னபூரணியை வழிபட வேண்டும்' என்கிறார் ஆதிசங்கரர்.
காசிஅன்னபூரணி ஸ்தோத்திரத்தில்,
''அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக் ஷாம் தேஹி ச பார்வதி!!''
என்று பாடியுள்ளார்.
''எனக்கு பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாக விளங்கும் அம்பிகையிடம் உயிர்கள் அனைத்தும் அன்பு, அறிவு, வைராக்கியம் என்னும் யாசகத்தை பெறட்டும்'' என்று நம் மீது கொண்ட கருணையால் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.