ADDED : மார் 17, 2017 01:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூரில் சிவன் வீரட்டேஸ்வரர் என்ற பெயரிலும், திருமால் ஹர சாப விமோசன பெருமாள் என்ற பெயரிலும், பிரம்மா சரஸ்வதியுடனும் உள்ளனர்.
* திருச்சி மாவட்டம் உத்தமர் கோவில் பிட்சாண்டார் கோவிலில் மகாவிஷ்ணு சயனக்கோலத்திலும், சிவன் பிட்சாடனாராகவும், பிரம்மா சரஸ்வதியோடும் காட்சி தருகின்றனர்.
* ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் சிவன் லிங்கமாகவும், திருமால் ரங்கநாதராகவும், பிரம்மா வன்னி மரத்தடியிலும் அருள்புரிகின்றனர்.
* கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் நந்தி அருகிலுள்ள கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்களாக 'தாணு' என்ற பெயரில் சிவன், மால் என்ற பெயரில் பெருமாள், 'அயன்' என்ற பெயரில் பிரம்மா எழுந்தருளியுள்ளனர்.

