
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராவணன் கொல்லப்பட்டதும், அனுமன் சீதையிடம் வந்தார். “உங்களை இங்குள்ள அரக்கிகள் துன்புறுத்தினர். பதிலாக அவர்களை நான் துன்புறுத்த அனுமதி தாருங்கள்,” என்றார். பக்குவப்பட்ட மனம் கொண்ட அனுமனுக்கே பழிவாங்கும் உணர்வு இருந்ததைக் கண்ட சீதா, “ராவணனின் வேலைக்காரர்களான அவர்கள், அவன் இட்ட கட்டளையைச் சரிவர செய்தார்கள். அதனால், அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்! எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது,” என்றாள். பகைவனையும் நேசிக்கும் இந்த மனநிலையை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

