
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராமமோ, நகரமோ ஊருக்கு வடக்கே, வடக்கு நோக்கி ஒரு எல்லைக்காவல் அம்பாளை நிறுவியிருப்பர். இவளை 'வடக்குவாசல் செல்வி' என்பர். பேச்சுவழக்கில் 'வடக்குவாச்செல்லி' என்பார்கள். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர், விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களிலுள்ள வடக்குவாசல் செல்வி அம்மன் சிலைகள் உக்கிரமாக இருக்கும். எட்டுக்கரங்களுடன் சகல ஆயுதங்களுடன் ஊரைப் பாதுகாப்பவளாக இவள் விளங்குகிறாள். இவளுக்கு இவ்வூர்களில் தனிக்கோயில்கள் உள்ளன. தஞ்சாவூர் வீரமாங்குடி செல்லியம்மன் வடக்குப் பார்த்து எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். ஈரோடு பாரியூர் கொண்டத்து காளியம்மன் ருத்ரகோலத்தில் வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். இதே ஊரில், காஞ்சிக்காயில் சீதேவி அம்மன் வடக்குநோக்கி எட்டுக் கைகளுடன் எழுந்தருளியுள்ளாள்.