ADDED : ஜன 15, 2013 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்', என்ற முதுமொழிக்கு ஏற்ப பழைய பொருட்கள் மற்றும் குப்பை குளங்களை கூட்டி பொசுக்குகின்றனர். வடமாநிலங்களில் 'லோரி' கொளுத்துவது என்று கட்டைகளை வைத்து நெருப்பு மூட்டி அதில் அவல், பொரி கடலையைப் போடுகின்றனர். அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். வடை, போளி சாப்பிடுகின்றனர். ஒரு குட்டித்தீபாவளி போல போகியைக் கொண்டாடுகின்றனர்.