நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணெய் பிரியனான கிருஷ்ணருக்கு முறுக்கும், சீடையும்கூட ரொம்ப பிடிக்கும். இதற்கு பின்னால் சுவாரஸ்ய காரணம் ஒன்று உள்ளது. அது என்ன?
கிருஷ்ணர் பிறக்கும்போது அவரது தாய்மாமனான கம்சன் கெட்ட கனவு ஒன்றை கண்டார். அதனால் கோபப்பட்ட அவர் துாக்கத்திலேயே பற்களை நறநறவென்று கடித்தார். இந்த சத்தமே பகவான் கிருஷ்ணர் அவதரித்ததற்கான மங்கல ஒலியானது. இதை உணர்த்தவே கடித்தால் நறநறவென்று சத்தம் கேட்கும் சீடை, முறுக்கு உள்ளிட்ட பட்சணங்களை கிருஷ்ண ஜயந்தியன்று நிவேதனம் செய்கிறோம்.

