நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாபலி சக்கரவர்த்தி தன் தந்தை விரோசனனிடம், ''எப்படி மனதை வெற்றி கொள்வது என்று கேட்டான். அதற்கு விரோசனன்,''அழியும் பொருட்களின் மீதுள்ள ஆசையைக் குறைப்பதாலும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதாலும் இயலும். மனமே நம் விதிக்கு காரணமாகிறது. மனம் என்னும் ஊஞ்சல் ஆடும்வரை நமக்கு அமைதி கிட்டாது. நம் முன்னேயுள்ள ஆன்மாவைக் காண்பதாலும், உலகின் புறப்பொருளின் மீதுள்ள நாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாலுமே அந்த நிலையை அடையமுடியும்,'' என்றான்.
- செல்வா