ADDED : நவ 29, 2021 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த ரங்கய்யர் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களைத் தரிசிக்க திட்டமிட்டார். ஆனால் புறப்படும் நேரத்தில் குடும்பத்தினரை அனுப்பி விட்டு அவர் மட்டும் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் ரமண மகரிஷியை சந்தித்தார். 'எனக்கு கும்பகோணம் கோயில்களை விட நீங்க தான் பெரிசு' என்று சொல்லி வணங்கினார். அங்கு தங்கி உபதேசங்களைக் கேட்டார். பின்னர் ரமண மகரிஷியைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டார். அப்போது “ரங்கா! நீ எங்கிருந்தும் வரவுமில்லை. எங்கும் போகவுமில்லை. நாம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறோம். நான் சொல்றது புரிஞ்சா நீ என்னுடனேயே இருப்பதை உணர்வாய். உனக்கும் எனக்கும் எந்த பேதமும் இல்லை என்பதை அறிந்து கொள்” என்றார்.

