sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முன்னோர் சாபம் நீங்க

/

முன்னோர் சாபம் நீங்க

முன்னோர் சாபம் நீங்க

முன்னோர் சாபம் நீங்க


ADDED : ஜூன் 07, 2021 08:09 PM

Google News

ADDED : ஜூன் 07, 2021 08:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். சுபநிகழ்ச்சிகளும் நடைபெறாமல் தள்ளிப்போகக்கூடும். இதற்கு பரிகாரம் இருக்கிறது.

வீட்டு பூஜை அறையில் லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து மாலையில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இதை 48 நாள் பக்தியுடன் சொன்னால் விருப்பம் நிறைவேறும். அப்போது காய்ச்சிய பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் பிரசாதமாக வைப்பது நல்லது.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:

யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:

தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

இதை சொல்ல முடியாதவர்கள் பொருளை மட்டும் சொல்லி வழிபடலாம்.

நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரன், தோழனாக இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவன் தான். நம் எஜமானனாகவும், எல்லாமுமாகவும் அவனே இருக்கிறான். பூலோகம், விண்ணுலகத்தை ஆள்பவன் நரசிம்மனே. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவன் இருக்கிறான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.






      Dinamalar
      Follow us