ADDED : ஜூலை 26, 2022 10:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் நாம் ஏன் கோயிலுக்கு செல்கிறோம்? வெயிலில் நிற்கும்போது வெப்பத்தை உணரலாம். அதுவே ஒரு லென்சின் கீழ் கையை வைக்கிறோம். என்னவாகும்... கை பொசுங்கிவிடும். சூரியக்கதிர்கள் ஒன்றுதான். ஆனால் அது குவியும்போது அதனின் சக்தி கூடுகிறது.
அதுபோல்தான் கோயில் வழிபாடு. அங்கு சென்று வழிபடும்போது நமது மனம் ஒருமைப்படும். இதனால் வேண்டுதல் பலித்துவிடும். இது மட்டுமல்ல. பல மகான்கள் கோயிலுக்கு வந்திருப்பர். அவர்கள் பாதம்பட்ட இடத்திற்கு சென்றால் நமது பாவமும் தீருமல்லவா... எனவே கோயிலுக்கு செல்லுங்கள். அதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

