
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மவுனம் பழகினால், மனதின் குரலை கேட்க முடியும் என்பர். மோனம் என்பது ஞானவரம்பு என அவ்வையார் குறிப்பிடுவார். சிவன்கோயில்களில் தெற்குபிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் இருப்பார். இவர் பேசும் மொழி மவுனம், இதனை மூன்றாக பிரிப்பர்.
உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மவுனம்.
இதனைச்செய்பவர் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டி இருப்பர்.
வாக்கு மவுனம் என்பது பிறரிடம் பேசாமல் அமைதி காப்பதாகும்.
மனதில் கடவுளின் உருவத்தை நினைத்து தியானமாக இருப்பது மன மவுனமாகும்.
இந்த மவுனங்களை கடைபிடிப்பவர்களுக்கு ஞானம் கிடைக்கும். கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுவர்.

