ADDED : பிப் 24, 2017 10:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்க விளையாட்டில் சாமர்த்தியசாலியாகத் திகழ்ந்த தன் மகளை வெல்பவருக்கு திருமணம் செய்து தருவதாக வசுசேனன் என்ற மன்னன் அறிவித்தான். சிவன் மாறு வேடத்தில் சென்று, அவளை வெல்லவே, மன்னன் அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தான். இதனால் சிவனுக்கு 'சதுரங்க வல்லபேஸ்வரர்' என்றே பெயர் ஏற்பட்டது. இந்த சிவன் கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 10 கி.மீ., தூரத்திலுள்ள பூவனூர் கிராமத்தில் உள்ளது. செஸ் விளையாட்டில் வெற்றி பெற நினைப்பவர்கள் இவரை வழிபடுகின்றனர்.

