ADDED : பிப் 24, 2017 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசுரர்கள் தங்களின் சக்தியால் சூரிய, சந்திரரை மறைத்து பூலோகத்தை இருளில் மூழ்கடித்தனர். அசுரர்களுக்கு முடிவு கட்ட விரும்பிய பிரகதாரண முனிவர், காசி சென்று யாகம் செய்தார். மனம் இரங்கிய சிவன் தன் சக்தியில் சிறுபங்கை யாகத்தில் சேர்க்க, அது பைரவர் என்னும் சக்தியாக வெளிப்பட்டது. முனிவரின் வேண்டுகோளை ஏற்ற பைரவர் அசுரர்களை ஒடுக்கி, சூரிய சந்திரரை முன்போல பிரகாசிக்கச் செய்தார். அதன்பின் தெற்கு நோக்கி வந்த பைரவர் சிவனின் ஆணைப்படி திருப்புத்தூர் என்னும் தலத்தில் யோக நிலையில் அமர்ந்து அருள்புரிந்தார். இவரை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு. மூலவராக திருத்தளிநாதர் வீற்றிருந்தாலும், பைரவருக்கே முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. மதுரை - தஞ்சாவூர் சாலையில் ௬௩ கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது.

