ADDED : அக் 27, 2023 11:17 AM

திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், அவர்மீது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதமும்தான்.
'கவுசல்யா சுப்ரஜா, ராம, பூர்வா, சந்த்யா பிரபர்த்ததே' எனத்துவங்கும் இந்த வெங்கடேச சுப்ரபாதத்தை வைணவ ஆச்சார்யார் மணவாள மாமுனிகளின் சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் இயற்றியது. இருந்தாலும் இதை உலகறியச் செய்தவர் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிதான்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரது சேவையை பாராட்டி, கீழ் திருப்பதி பிரதானசாலையில் இவருக்கு சிலை வைத்து கவுரவப்படுத்தியது. திருப்பதி வேங்கடமுடையான் கோயிலில் தினமும் அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாதசேவையின்போது வேத பண்டிதர்கள் பெருமாள் முன்னர் வேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்கின்றனர். இது நேரடி ஒலிபரப்பாக கோயில் மாட வீதிகள் உட்பட திருமலை முழுவதும் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-நல்லவன்