ADDED : செப் 23, 2022 09:54 AM
ஸப்தகிரி என்னும் பெயரைச் சொன்னால் போதும் பலன் உண்டு என்கிறது புராணம். அது என்ன ஏழு மலைகளைக்குறிக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோமா...
1. (கலியுகம்)வேங்கடாத்ரி - வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாகும் இடம். வேங்கடம் என்ற சொல்லுக்கு பாவங்களைச் சுட்டெரித்தல் என பொருள். எனவே வேங்கடாத்ரி என பெயர் பெற்றது.
2. சேஷாத்ரி - மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் பொருட்டு ஆதிசேஷன் இங்கு மலை உருவில் தோன்றினான் எனவே சேஷாத்ரி என்ற பெயர் விளங்களாயிற்று.
3. வேதாத்ரி - நான்கு வேதங்களும் மலை உருவில் பெருமாளை வழிபடுவதால் வேதாத்ரி, வேதகிரி எனப்பெயர் பெற்றது.
4. (கிருதயுகம்)கருடாத்ரி - திருமால் வாகனமாகிய கருடன் எம்பெருமான் அவதாரத்தின் பொருட்டு எடுத்து வந்து இங்கு வைத்துள்ளதால் இது கருடாத்ரி ஆனது.
5. (திரேதாயுகம்)விருஷபாத்திரி - விருஷபாசுரன் என்ற அசுரனுக்கு இம்மலையில் தான் திருமால் மோட்சம் கொடுத்தார். அவன் வேண்டுகோளுக்கு இணங்கி விருஷபாத்ரி என பெயர் பெற்றது.
6. (துவாபரயுகம்)அஞ்சனாத்ரி - அனுமனின் தாயான அஞ்சனை. அவள் இந்த மலையில் தவம் செய்தாள். மகப்பேறு வேண்டினாள். ஆதிவராக மூர்த்தி அருளால் அனுமனைப் பெற்றாள். அதனால் அவளுடைய பெயரால் அஞ்சனாத்ரி என பெயர் வந்தது.
7. ஆனந்தாத்ரி - ஆதிசேடன், வாயு தேவன் இருவரில் யார் பெரியவர் என தனது பலத்தை காட்டி பெருமாளின் திருவருளால் ஆனந்தமுற்றார்கள் ஆதலால் ஆனந்தாத்ரி ஆயிற்று.

