ADDED : அக் 20, 2023 05:22 PM

அ நிறம் | அளவு
வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக அன்னம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னம் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருந்தாலும் தீமையை விடுத்து, நன்மையை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம். தமிழகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனமாக மயில் உள்ளது. மயில் தோகையில் வட்டவடிவில் கண்கள் இடம் பெற்றிருக்கும். இரண்டு கண்களால் மட்டுமின்றி அறிவுக்கண்களால் எதையும் கற்றுத் தெளிய வேண்டும் என்பது இதன் தத்துவம். அன்னத்தில் இருப்பவளுக்கு ஹம்ஸ வாஹினி என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதிக்கு வர்ஹ வாஹினி என்றும் பெயர்.
