
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கிருஷ்ணா', 'கிருஷ்ணா' என்று கதறிய திரவுபதியின் மானத்தை காத்தருளினார் கிருஷ்ணர். வறுமையில் வாடிய தன் நண்பரான குசேலரது ஏழ்மையை போக்கினார். தன்னை நம்பிய பாண்டவர்களின் துயரத்தை தீர்த்தார். இப்படி பல அதிசயம் நிறைந்த கிருஷ்ண அவதாரத்தின் பெருமையை முற்றிலுமாகக் கூறுவது எளிதல்ல. அவரது செயல்களை நினைத்தாலே இனிக்கும். ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம், பக்தவிஜயம் போன்ற நுால்கள் அவரது லீலைகளை விவரித்துள்ளன.

