ADDED : ஏப் 22, 2011 02:43 PM
வடமாநிலங்களில் 'பைராகி' எனப்படும் சாமியார்கள் பிச்சை எடுத்தே சாப்பிடுவார்கள். அவர்களில் சிலர் ஒரு சமயம், தென்மாநிலங்களுக்கு வந்தனர். ஆந்திராவில் இறங்கிய அவர்கள் வீடுகளில் சென்று பிச்சை கேட்ட போது, அவர்களின் உருவத்தைக் கண்டு வெறுத்த தெலுங்கு மக்கள் அவர்களை விரட்டினர். எனவே அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். இங்கேயும் அவர்களை 'போ போ'என்று விரட்டினர்.
அவர்கள் வடக்கே திரும்பிய பிறகு 'இல்லா போபோ கஹே தெலுங்கி' என்று ஒரு பாட்டு பாடினார்கள். ''நாங்கள் தெலுங்கு தேசத்துக்கு போனோம். அங்குள்ள மக்கள் எங்களை 'பிச்சை இல்லை, போ போ என்று விரட்டினர்,'' என்பது இதன் பொருள். தெலுங்கில் 'போ போ' என்று சொல்ல வாய்ப்பில்லை. ஏனெனில் தெலுங்கர்கள் 'போ போ' என்பதை 'வெள்ளு வெள்ளு' என்று தான் சொல்வர். இருப்பினும், தமிழகத்தையும் தெலுங்கு தேசமாக நினைத்துக் கொண்ட அவர்கள், அங்கே போய் அப்படி பாடினார்களாம். 'வெள்ளு' என்ற தெலுங்குச் சொல்லை விட 'போ, 'இல்லா' (இல்லை) என்ற தமிழ் வார்த்தைகள் அவர்கள் மனதில் நின்றுவிட்டன.