
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேர,சோழ,பாண்டியர்களுக்கு குலதெய்வம் பழநி முருகன். 'மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி' என்ற பழமொழிக்கேற்ப, தமிழ் மக்களுக்கும் அவரே குலதெய்வமாகி 'தமிழ்க்கடவுள்' என புகழ் பெற்றார். மூவேந்தரில் கேரளப்பகுதியை ஆண்ட சேரர்களே மூத்தவாரிசாக இருந்தனர். அதனால், பழநி முருகன் சேரநாட்டைப் (கேரளம்) பார்த்தபடி மேற்குநோக்கி காட்சி தருகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன், சேரமான் பெருமானால் இக்கோயில் கட்டப்பட்டது. திருமலைநாயக்கர் காலத்தில் திருப்பணி நடத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

